தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4 நாட்களில் 11 ஆயிரத்து 500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.