தமிழகத்தின் தக்காளிஅதிக அளவில் விளையும் தர்மபுரி,சேலம், கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து சரிந்துள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் தக்காளியின் விலை அதிகரித்து கிலோவுக்கு ரூ.25 விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் தக்காளியின் விலை ரூ.100 ஆக விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் விலை சரிவு ஏற்பட்டு கிலோ ரூ.35 விற்பனையானது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் தக்காளியின் விலை உயரத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் உழவர் சந்தைகளில், முதல் ரக நாட்டு தக்காளி பழம் கிலோ 45 ரூபாய்க்கு விற்றது, நேற்று 75 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 40 ரூபாய்க்கு விற்றது, 60 ரூபாயாகவும் உயர்ந்தது.
உயர்ரக முதல்ரக தக்காளி, 40 ரூபாய்க்கு விற்றது 70 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 35 ரூபாய்க்கு விற்றது 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெளி மார்க்கெட்டில், நாட்டுத் தக்காளி முதல் ரகம், 60 ரூபாய்க்கு விற்றது 90 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 55 ரூபாய்க்கு விற்றது 75 ரூபாயாக விலை உயர்ந்தது. உயர்ரக முதல் ரக தக்காளி, 50 ரூபாய்க்கு விற்றது 75 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 45 ரூபாய்க்கு விற்றது, 65 ரூபாய்க்கும் விற்பனையானது.