தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனிடையே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 507 தெருக்களில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தோற்று அதிகரிப்பால் நந்தம்பாக்கத்தில் 800 படுக்கைகள் தயார்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துள்ளன. இரவு நேர ஊரடங்கு பள்ளிகள் திறப்பில் கட்டுப்பாடு குறித்து டிசம்பர் 31-க்கு பிறகு தெரிய வரும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.