தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 13 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு பள்ளிகளே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.