Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“750 சவரன் நகை கொள்ளை”…. வீட்டின் கிணற்றில் கிடந்த மூட்டை…. பரபரப்பு சம்பவம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நேற்று முன்தினம் கொள்ளை போன 750 சவரன் தங்க நகைகள் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் நேற்று முன்தினம் சுமார் 750 சவரன் தங்கம் திருட்டு போனது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காணாமல் போன நகை குறித்து காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் கிணற்றிலிருந்து ஒரு மூட்டையை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன் அந்த மூட்டையை பிரித்து பார்க்கும் போது அதில் 750 சவரன் நகையும் இருந்துள்ளது நகையை கிணற்றில் வீசியவர்கள் யார் என்று? காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |