தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரானவர் இமான். இவர் அடுத்தடுத்து தொடர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் இமானும் அவருடைய மனைவி மௌனிகாவும் விவாகரத்து பெற்று விட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இமான் -மௌனிகா தம்பதியினர் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இதுகுறித்து அவர், நானும் எனது மனைவி மௌனிகாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.