Categories
மாநில செய்திகள்

வெயிட் பண்ணுங்க மக்களே….. இன்னும் நிறைய அதிர்ச்சி காத்திருக்கு….!! ராஜேந்திர பாலாஜி குறித்து அமைச்சர் சா.மு நாசர் பேட்டி….!!!

ராஜேந்திர பாலாஜியின் ஊழல்கள் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும் என பால்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் நேற்று தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலேயே 83 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஊழல் செய்த 10 அமைச்சர்களின் பெயர்களில் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என அவர் கூறினார்.

மேலும் தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை 8 தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் செய்த மோசடி ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது எனவும், இன்னும் பல திடுக்கிடும் தகவல்களை கேட்க தமிழக மக்கள் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |