ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கைபேசி உதிரிபாக தொழிற்சாலையில் 2000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொட்டூரில் தனியார் கப்பல் கட்டும் பொறியாளர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வேலை புரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பெண்கள் இறந்து விட்டது.
இதனை பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம் மற்ற தொழிலாளர்களுக்கு தகவல் அளிக்கவில்லை. இதனால் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தரமற்ற உணவு வழங்கிய வாழும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாக்ஸ்கான் ஆலை நிர்வாகிகளை மாற்ற முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில் பாக்ஸ்கான் நிறுவனம் இந்த முடிவு எடுத்து இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.