Categories
உலக செய்திகள்

“புத்தாண்டு பிரார்த்தனைகளுக்கு தடை!”….. பட்டாசு வெடிக்கக்கூடாது…. உகாண்டாவில் கடும் கட்டுப்பாடுகள்…..!!

உகாண்டா அரசு, மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்திருக்கிறது.

உகாண்டாவில் வருடந்தோறும் பட்டாசு வெடித்து புத்தாண்டை மக்கள் கொண்டாடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அங்கு கொரோனா தொற்றை தடுக்க இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் காவல் துறை செய்தி தொடர்பாளரான, பிரெட் எனாங்கா  தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்று பரவக்கூடிய வகையில் மக்கள் கூட்டமாக சேர்ந்து புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும், தேவாலயங்களில் புத்தாண்டின் போது இரவு பிரார்த்தனைகளுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புத்தாண்டு இரவு ஊரடங்கு நேரத்தில் கொண்டாடப்படுகிறது. எனவே, அந்த நேரத்தில் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதால், நாங்கள் கண்டிப்புடன் இருப்போம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |