Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. மனைவி மீது கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

குடித்துவிட்டு மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்குடி கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 22 வயதுடைய பிரசன்னா என்ற மகன் உள்ளார். இவர் சிவகங்கையை சேர்ந்த ஆசிகா என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரசன்னாவும் ஆசிகாவும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் பிரசன்னாவின் பெற்றோர் ஆசிகாவிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசன்னா குடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தட்டிக்கேட்ட ஆசிகாவை கோபத்தில் பிரசன்னா துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து ஆசிகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரசன்னாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |