தேசிய தர குறியீட்டில் A++ பெற்று பெரியார் பல்கலைக்கழகம் சாதனை படைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள கல்வி ஆராய்ச்சி கட்டமைப்பு விரிவாக்க பணிகளை ஆய்வு செய்து தரக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்து தர மதிப்பீடு வழங்கி வருகிறது. இதன்படி கடந்த 22ஆம் தேதி பெரியார் பல்கலைக் கழகத்திற்கு வந்து மூன்று தினங்கள் இந்த குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி பெரியார் பல்கலைக்கழகம் 3.61 மதிப்பெண்கள் பெற்று A++ தரச் சான்றிதழ் பெற்றது.
அதன்படி இந்திய அளவில் 2-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் அதன்படி பாடத்திட்டங்கள் வடிவமைப்பில் 3.6 புள்ளிகளையும் கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் 3.76 புள்ளிகளையும் ஆராய்ச்சி புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கப் பணிகளில் 3.72 புள்ளிகளையும் கட்டமைப்பு மற்றும் கற்றல் வள ஆதாரங்கள் 3.7 புள்ளிகளையும் நிர்வாகம் தலைமைத்துவம் மேலாண்மையில் 3.33 புள்ளிகளும் பெற்றுள்ளது.