தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபோது சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து வங்கி உயரதிகாரிகள் அனைத்து கூட்டுறவு அடமான நகைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அப்போது, கூட்டுறவு வங்கியில் நகை கடனில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. அதாவது போலி நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகையை இல்லாமலும் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நகை கடனில் தவறு செய்த அனைத்து அதிகாரிகளையும் கண்டுபிடித்து அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நகை கடையை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் தள்ளுபடி கிடையாது. அதனைதொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கி நகை கடன் வைத்திருந்தால் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது. மேலும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும்வர்கள், ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்கதாவர்கள் மற்றும் வெள்ளை அட்டை வைத்திருப்பவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்படாது. இதன்படி வங்கிகள் பெறப்பட்ட 48 லட்சம் நகை கடனில் 35 லட்சம் பேருக்கு நகை கடன தள்ளுபடி கிடையாது என்று கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.