2024 ஆம் வருடம் பொதுத் தேர்தலில் ஆந்திர மக்கள் பாஜகவிற்கு ஒரு கோடி வாக்குகள் அளித்தால் 70 ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்வோம் என்றும், அதற்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 50 ரூபாய்க்கு கூட மதுவை விற்பனை செய்வோம் என்று ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோமுவீர்ராஜு பேசியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஆந்திராவில் மதுபானங்கள் தரமானதாக இருக்கவில்லை. போலி ஸ்டிக்கர்களை ஒட்டி விற்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபரும் மாதத்திற்கு 12,000 ரூபாய் மதுபானம் வாங்குவதற்கு மட்டுமே செலவிடுகிறார்கள். இந்த பணத்தை நலத் திட்டங்கள் என்ற பெயரில் திருப்பிக் கொடுத்து மக்களுக்கு நன்மை செய்வதாக அரசு ஏமாற்றி வருகிறது. மாநில அரசு மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்தும் அதற்கான பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.