தமிழகத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் 10.11 லட்சம் பெண்களுக்கும், 9.23 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.மாநிலம் முழுவதும் 12,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த நடவடிக்கைகள் இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் சிறப்பு செல்போன் செயலியை பொது சுகாதாரத் துறை அறிமுகம் செய்துள்ளது.
அதன் மூலமாக வழக்கமான தடுப்பூசிகள், கொரோனா தடுப்பூசிகள் “மிஷன் இந்திர தனுஷ்” திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த முடியும். தடுப்பூசி முகாம்கள் மட்டுமல்லாமல் வீடுதோறும் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய முடியும். தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட தகவல்களை மட்டும் அல்லாமல் விடுபட்டவர்கள் விவரங்களையும் திரட்டி அது தொடர்பான தரவுகளையும் இந்த செயலி மூலம் தொகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தில் பங்கெடுக்கும் அலுவலர்களுக்கு இந்த செயலியை கையாள்வது குறித்த பயிலரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.