Categories
மாநில செய்திகள்

திடீரென கண் திறந்த ஐயப்பன் சுவாமி சிலை…. கோவை அருகே பரபரப்பு…..!!!!

கோவை மாவட்டத்தில் செல்வபுரம் தில்லைநகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்கை மாதம் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்த கோவிலில் 40 ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜையின்போது ஐயப்ப சாமி சிலை நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை பக்தர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது அந்த வீடியோவில் ஐயப்ப சாமி கண் திறந்து மூடுவது போல காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிகழ்வு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |