தொழிலதிபரின் வீட்டில் 687 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோபாலபட்டினம் பகுதியில் தொழிலதிபரான ஜகுபர் சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சகுபர் சாதிக் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பிறகு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 687 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஜாகுபர் சாதிக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.687 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.