முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள தேவையான நிதியை விரைவில் வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதல்வர் எழுதிய, கடிதத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் ரூ.6,230 கோடி தேவை. அதில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1,510.83 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக ரூ.4,712.62 கோடியும் தேவை என்று எழுதியுள்ளார்.