பீட்ரூட் கிரேவி
தேவையான பொருள்கள்
பீட்ரூட்- 2
பெரிய வெங்காயம்-1
பூண்டு- 6 பல்
தக்காளி- ஒன்று
உப்பு -தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
அரைக்கும் பொருள்கள்
தேங்காய்- ஒரு கப்
சோம்பு- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூ-ள் ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் -ஒன்றரை தேக்கரண்டி
தாளிக்க வேண்டிய பொருட்கள்
பட்டை- 2 துண்டு
கிராம்பு- 4
கறிவேப்பிலை எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை
பீட்ரூட் தக்காளி வெங்காயம் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கவும் அதில் பீட்ரூட் உப்பு மஞ்சள்தூள் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்க்கவும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்
இப்போது சுவையான கிரேவி தயார்