Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்தில் முடியப்போகும்…… தொழிலதிபர் – காஜல் அகர்வால் காதல்…..!!!!!!

 காஜலுக்கும் , தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 
2004-ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளி வந்த கோமாளி படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
மேலும் பாரிஸ் பாரிஸ் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் தணிக்கை குழு நடவடிக்கையால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நடிகை காஜல் அகர்வாலுக்கு இப்போது 34 வயதான நிலையில், காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும்  இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளன .
தொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்
இந்த தகவலை அவருக்கு நெருக்கமானவர்களும் உறுதி செய்து உள்ளனர்.மேலும் விரைவில் இவர்களின் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்துக்கு பின்னர் வேறு படங்களுக்கு அவர் ஒப்பந்தமாகவில்லை என்றும் திருமணத்துக்கு பின் சினிமாவிலிருந்து   விலக முடிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |