Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரே இப்படியா செய்யுறது?… 35,37,697 பேருக்கு கிடையாதா?… இதுலாம் நியாயம் தானா? 

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2021 என 10 ஆண்டுகள் அடுத்தடுத்து 2 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அதிமுக ஆட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலோடு முடிவுக்கு வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்பு திமுக அரியணையை கைப்பற்றி தமிழக முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்று அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை  வெளியிட்டார்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகி பிரச்சாரத்தில் திமுக வெளியிட்ட 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் மக்களை கவர்ந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற்று சில அறிவிப்புகளை கையொப்பமிட்டு அமல்படுத்தினார். திமுக தேர்தல் வாக்குறுதி அறிவிப்பில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது நகை கடன் தள்ளுபடி.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் வாங்குங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு அதனை தள்ளுபடி செய்கின்றோம் என்றெல்லாம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது திமுக எடுத்துள்ள முடிவு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நகை கடன் தள்ளுபடி செய்வதில் உறுதியாக உள்ள திமுக 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 பேரில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 697 பேருக்கு தள்ளுபடி கிடையாது என்று தெரிவித்துள்ளது. இதனால் நகை கடன் பெற்ற 25 சதவீத பேருக்கு மட்டுமே தள்ளுபடியாகும் என்ற முடிவு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேபோல 2020ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் பெற்று இருந்தால் நகை கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது என்றும் அரசு தெரிவித்துள்ளது, மக்களுக்கு  ஏமாற்றமளிக்கிறது.

Categories

Tech |