மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஜனவரி முதல் ஜூலை வரை வருடத்துக்கு 2 முறை புதுப்பிக்கப்பட்டு உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலமாக DA கணக்கிடப்படுகிறது. இதில் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு DA வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இந்த அகவிலைப்படியானது கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30 வரை நிலுவையில் வைக்கப்பட்டது.
இந்த காலத்தில் இறுதியாக 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி மொத்தம் 11% அதிகரிக்கப்பட்டு 28 % ஆக நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படியை (DA) 31 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 18 மாத கால நிலுவை தொகை வழங்கப்படாமல் இருந்தது. இதனிடையில் பல மாதங்களாக நிலுவையிலுள்ள DA நிலுவைத் தொகையை வழங்குவதற்கான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய ஊழியர்களின் DA நிலுவைத் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும்.
கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள DA நிலுவைத்தொகையை ஒரே தவணையில் அளிப்பதற்கு அமைச்சரவை கவுன்சில் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சகம், பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை மற்றும் செலவினத் துறை அதிகாரிகளுடன் கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் (JCM) கூட்டம் விரைவாக நடைபெறும். இதில் DA நிலுவைத் தொகையை மொத்தமாக வழங்குவது தொடரப்பட ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. அந்த அடிப்படையில் முதல் நிலை ஊழியர்களின் DA நிலுவைத் தொகை 11,880 ரூ முதல் 37,000 ரூ வரை இருக்கும். அதே சமயம் லெவல்-13 ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகையாக ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை வழங்கப்படும்.