இங்கிலாந்தை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேடான kitkat டை பயன்படுத்தி தக்காளியை வெட்டிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் வசித்து வரும் லாரன்ஸ் என்பவர் பிரபல யூடியூபர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் இவர் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டான kitkat டை கூர்மையாக்கி அதனை பயன்படுத்தி தக்காளியை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த லாரன்ஸ் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை சுமார் 1,00,000 த்துக்கும் மேலானோர் பார்த்துள்ளார்கள். மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் இது ஒரு வித்தியாசமான முயற்சி என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.