Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு செம ஜாலி”…. ஜனவரி 1 முதல் 15 வரை பள்ளிகளுக்கு…. கொண்டாட்டத்தில் மாணவர்கள்….!!!

டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 18 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து உள் மதிப்பீட்டில் கணக்கிடப்படும் பணிகள் மற்றும் செயல்பாடுகளை பராமரிக்க பள்ளிகளை கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளின் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை குறித்துக் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் தனிக்கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் டெல்லி அரசு பள்ளிகளின் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 1 முதல் 15, 2022 வரை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் கல்வி இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின் பேரில்  ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் ஏதும் நடத்தப்பட முடியாது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் கற்றலை ஒருங்கிணைக்க உதவும் விதமாக இதுவரை உள்ளடக்கப்பட்ட 2021-22 கல்வி அமர்வுக்கான பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |