கோவையில் ஐயப்ப சாமி சிலை கண் திறப்பதாக கூறி பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
கோவை செல்வபுரம் தில்லை நகரில் உள்ள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் ஒன்று உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்வதற்கு விரதம் இருந்து இந்த கோவிலில் சாமியை தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் இன்று 40வது ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூஜையின்போது சாமிக்கு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோவில் சாமி சிலை கண் திறந்து மூடுவது போல் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த வீடியோவை பதிவு செய்தவர் நெகிழ்ச்சி அடைந்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் காண்பித்தார். இந்த வீடியோவை தங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் அய்யப்பன் சுவாமி கண் திறந்ததாக கூறப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே பரபரப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.