விழுப்புரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரத்தில் இருந்த பணம் அதிஷ்டவசமாக தப்பியது. அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கி செயல்பட்டு வருகிறது.
இதன் வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனுள் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் போன்றவை இருந்துள்ளன. நேற்று மாலை இந்த மையத்தில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் இயந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.