மெக்கானிக் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் முகமது பயாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது பயாசஸூக்கும், ரஹீம் செரீப், முகமது நூருல்லா உள்ளிட்ட 3 நண்பர்களுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளை தெருவில் நிறுத்தி பழுது பார்த்து கொண்டிருந்ததை தட்டி கேட்ட போது நண்பர்கள் 3 பேரையும் முகமது பயாஸ் தாக்கியுள்ளார். இதனை மனதில் வைத்து நண்பர்கள் 3 பேரும் ஆடு வெட்டும் கத்தியால் முகமது பயாஸை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனையடுத்து படுகாயமடைந்த முகமது பயாஸை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முகமது பயாஸ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஹீம் செரிப், முகமது நூருல்லா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.