இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி போல வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் அறிவித்துள்ளார்.
பயிற்சிக்கு பின்பு வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி பயிற்சியாளரான ரோட்டி எஸ்ட்விக் அளித்த பேட்டியில் கூறியதாவது, இளம் வீரர்களான ஹெட்மயர், பூரன் மற்றும் , ஹோப் ஆகியவர்கள் முனனேற்றம் அடைந்து வருகிறார்கள்.இது எங்களுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு கடினமாக பயிற்சி செய்து உழைத்தால் தான் போட்டிக்கு தயாராக முடியும் என்பது முக்கியமாகும்.
இந்த போட்டி தொடரில் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்கள். உண்மையிலேயே எங்கள் அணியில் உள்ள வீரர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள். இதனால் நாங்கள் வெற்றியை ருசிக்க தொடங்கி விட்டோம் . T 20 ஓவர் போட்டியில் ஹெட்மயர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒருநாள் போட்டிகளில் 4 சதங்களை அடித்து இருக்கிறார். அவரிடம் நிறைய திறமை இருக்கின்றன. கிரிக்கெட் பொறுத்தவரை ஒரு போதும் கவனக்குறைவாக இருக்ககூடாது.
இந்தியாவுக்கு எதிரான T 20 போட்டி தொடரில் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் ஆடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.கரீபியனில் நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான T 20 தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான செயல்பாடுகளில் அதிக வித்தியாசம் இருந்தது. தற்போது நடந்த இந்திய T 20 தொடரில் இரு அணிகளுக்கு இடையே சிறிய வித்தியாசம் தான் தெரிந்தது.இதை போல் நாளை நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டி தொடரிலும் எங்கள் அணி வீரர்கள் நன்றாக செயல்படுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.