இந்திய அணியில் புவனேஷ்குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் புவனேஷ்குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.இப்போட்டிக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புவனேஷ்குமாருக்கு வலதுபக்க இடுப்பு பகுதியில் வலி இருப்பதாக ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குடலிறக்க அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டதால், புவனேஷ்குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, ஷிகர் தவனுக்குப் பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு இருந்தார். இதை தொடர்ந்து தற்போது அணியில் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.