ஜெர்மனியில் ஒரு பெண் தன் வளர்ப்பு நாயை அடித்ததால், மற்றொரு பெண்ணை கடித்திருக்கிறார்.
ஜெர்மனியில் வசிக்கும் 51 வயதான பெண் ஒருவர், தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 27 வயதான இளம்பெண்ணை தாக்கியிருக்கிறார். மேலும், அவர், அந்த இளம்பெண்ணை கடித்துள்ளார். அதாவது, அந்த இளம்பெண், இவரின் வளர்ப்பு நாயை தாக்கியுள்ளார்.
இதனால், அந்த பெண் கோபமடைந்து, அவரை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஒருவரையொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், இருவரும் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.