Categories
மாநில செய்திகள்

ஜனவரி -3ம் தேதி முதல்…. உங்க நகையை போய் வாங்கிக்கோங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நகை கடன் தள்ளுபடி செய்பவர்களுக்கு ஜனவரி 3 முதல் நகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  25% பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள். 2020இல் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றிருந்தால் நகை கடன் தள்ளுபடி சலுகையை பெற முடியாது” என்றும் தெரிவித்தது. .

இதை தொடர்ந்து தற்போது நகை கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில் ஐந்து சவரன் கீழ் வழங்கப்பட்ட 35 லட்சம் நகை கடன்களில் 14.5 லட்சம் கடன் மட்டுமே தள்ளுபடி செய்வதற்கு ஏற்புடையது. மேலும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் நகை கடன் தள்ளுபடி செய்தவர்களுக்கு நகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். எனவே நகைகளை அடமானம் வைத்தவர்கள் கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று தங்களின் நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |