4 டோஸ் தடுப்பூசி எழுதிக்கொண்ட 44 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசி மட்டும் தான். இதனால் உலக நாடுகள் முழுவதும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை போடுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதில் பல நாடுகள் 100% தடுப்பூசியை தங்கள் மக்களுக்கு செலுத்தி விட்டது. தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் என்ற தொற்று பரவி வருவதால், மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் துபாயில் வசிக்கும் பெண் மத்திய பிரதேசத்துக்கு வந்துவிட்டு இன்று ஊர் திரும்ப இந்தூர் விமான நிலையம் வந்த நிலையில் அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவர் 4 தடுப்பூசி போட்டுக் கொண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.