மோட்டார் சைக்கிளை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலை பள்ளி அருகில் துரைசாமி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசாமி கடையின் முன்பு நிறுத்தியிருந்த மொபட்டை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதேபோல் நாசரேத் வியாபாரிகள் தெருவில் வசிக்கும் எட்வர்ட் என்பவரது மோட்டார் சைக்கிளும் திருட்டுப் போனது.
இதுகுறித்து எட்வர்ட் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை திருடியது நாசரேத் மணிநகர்-1 வது பகுதியில் வசிக்கும் இருதயராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருதயராஜை கைது செய்ததோடு அவரிடமிருந்த மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.