உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரே வாரத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
உலக நாடுகள் முழுவதும் கடந்த ஆண்டு முதல் தீவிரமாக வந்த கொரோனா தொற்று மக்களை உலுக்கி எடுத்தது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலக நாடுகள் முழுவதும், பெரிய இழப்பை சந்திக்க வைத்தது. தற்போதுதான் தடுப்பூசி பயன்பாட்டிற்கு பிறகு கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதையடுத்து டெல்டா என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் என்ற தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது.
இது டெல்டா வைரசை விட மிக வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கடந்த வாரத்தில் இந்த கொரோனா தொற்று முந்தைய வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பு உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகம். டிசம்பர் 20 இல் இருந்து 26 வரையான வாரத்தில் 49.9 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வரும் வாரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து நாடுகளும் அலர்ட் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.