மத்திய அரசுக்கு திமுக மறைமுகமாக ஆதரவு தருவதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சியும், மத்தியில் பாஜகவும் ஆட்சி செய்து வருகின்றது. பாஜக அதிமுக உடன் கூட்டணி கட்சியாக தற்போது வரை இருந்துள்ளது. இதனால் பாஜகவும் ஒரு வகையில் திமுகவுக்கு எதிர்க்கட்சி தான். திமுக செய்யும் ஒவ்வொரு செயலையும் பாஜகவினரும் அதிமுகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசுக்கு திமுக மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆட்சி கலைந்து விடும் என்ற அச்சத்தில் மத்திய அரசுக்கு ஆதரவை திமுக மறைமுகமாக தெரிவித்து வருகின்றது என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.