தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 610 ஆக இருந்த தொற்று இன்று 739 அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 ஆகவும், 614 பேர் டிஸ்டார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,02,588 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Categories