Categories
உலக செய்திகள்

கிரீஸில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்…. 5.7-ஆக ரிக்டர் அளவில் பதிவு….!!

கிரீஸ் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.7 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. இதனால் பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமானது, இதற்கு முன்பு 6.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது.

கிரீஸில் இருக்கும் க்ரிட் என்னும் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள், கடல் பகுதியில் நிலநடுக்கம் உருவானதால், அதிகப்படியான சேதங்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |