நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் 37 வகை மருந்துகள் தரமில்லாதவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது .
நாட்டில் விற்பனையாகி கொண்டிருக்கும் , எல்லா வகையான மருந்துகளையும் , மாத்திரைகளையும் , மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியம், மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் . அதன்பேரில் நவம்பர் மாதம் , 1,158 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் , அதில், 1,121 மருந்துகள் தரமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும்,மீதமுள்ள , குடற்புழு நீக்கம், வயிற்று உபாதைகள்,வாயுப் பிரச்னை, போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும், 37வகையான மருந்துகள், தரமற்றவை என்றும் போலியானவை என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை , மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம், cdscoonline.gov.in என்ற இணையதளத்தில் பதிவிட்டு வெளியிட்டுள்ளது .