அரசுப் பள்ளிகளில் வைத்து இல்லம் தேடி கல்வித் திட்டம் தன்னார்வலர்கள் முகாம் நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்கியுள்ளார். இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்பின் அவர் கற்பிக்கும் பாடப் புத்தகங்களையும் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து தன்னார்வலர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என செல்போனில் ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து திமிரில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் முருகன் தலைமை தாங்கியுள்ளார். பின்னர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமரேசன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் முதன்மை கல்வி அலுவலர் உஷா கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.