ஒன்றிய கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆவணக்காப்பகம் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த பெண் உள்ளாட்சித் தேர்தலில் சிலாவட்டம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இந்நிலையில் ரேணுகாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரேணுகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் உறவினர்கள் உடனடியாக ரேணுகாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாமல் தவித்த ரேணுகாவிற்கு கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கதாகும்.