போலீஸ்காரரிடம் இருந்து செல்போன் பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டையில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் செல்வகுமார் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் நின்று கொண்டு செல்போனில் பேசியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வகுமாரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் எழும்பூர் சேர்ந்த கல்லூரி மாணவர்களான மௌலி, கோகுல் ஆகிய 2 பேரையும் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.