Categories
மாநில செய்திகள்

“ஊரக உள்ளாட்சி தேர்தல்” 1,09,778 பேர் மனு தாக்கல்……. மாநில தேர்தல் ஆணையம் தகவல்….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக இதுவரை 1,09,778 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகின்ற 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றது. இந்த நிலையில் கட்சியின் அடிப்படையில் நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் பெயர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை மாநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் முதல்கட்டமாக வெளியிடப்பட்டது. இதனிடையே மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுவரை 1,09,778 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |