Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள நம்பியூர் பகுதியில் சக்திமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் இரவு புஷ்பா சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி சக்திமுருகனிடம் இருந்த ரூ.1000 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திமுருகன் திருப்பூர் வடக்கு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் செல்போனை திருடியது திருப்பூர் பகுதியில் வசிக்கும் அப்பாஸ், ஆசிக் அகமது, சர்புதீன் ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த 3 பேர் மீது தெற்கு காவல் நிலையத்தில் 3 செல்போன்கள் பறித்த வழக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |