மேற்கு வங்க மாநிலம் பிங்கலா என்ற கிராமத்தில் தட்டச்சு தொழிலாளி ஒருவர் ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி மற்றும் குழந்தை அவருடைய பெற்றோருடன் சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்து வேறு ஒரு நபருடன் தப்பி ஓடிச் சென்று விட்டார். இந்த தகவல் அறிந்த மறுநாளை அவர் தனது கிராமத்திற்கு சென்று உள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்துள்ளார் மேலும் பல இடங்களிலும் தனது மனைவி மற்றும் குழந்தையை தேடி வந்தார். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு என் மனைவி குழந்தையுடன் வீட்டு ஜன்னலை உடைத்து அதன் வழியாக வேறு ஒரு நபருடன் தப்பிச் சென்று விட்டார். அந்த நபர் என் மனைவிக்கு மொபைல் வாங்கி கொடுத்து அதன் மூலம் இருவரும் நள்ளிரவில் ரகசியமாக பேசி வந்துள்ளனர். காரில் வந்த அந்த நபர்தான் ஜன்னலை உடைக்க உதவி செய்து, என் மனைவி வீட்டில் இருந்த நகை,பணம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டார்.
என் மனைவி படிக்க தெரியாதவர் அந்த நபரது அது வாங்கி தரேன், இது வாங்கி தாரேன் என்ற போலியாக அளித்த வாக்குறுதிகளை நம்பி அவருடன் சென்று இருக்கலாம். அவரை பாதியில் இறக்கி விட்டால் கூட வீட்டுக்கு திரும்ப வர வழி தெரியாது. வீட்டில் உள்ள அனைவரும் என் மனைவி மற்றும் குழந்தை வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். என் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக நான் காத்திருக்கிறேன். நான் அவர்களுடன் வாழ விரும்புகிறேன். அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்குவேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இவருடைய உருக்கமான பதிவு பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.