தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தததையடுத்து அரசுத் துறைகளில் பல்வேறு வகையான மாற்றங்கள் எடுக்கபட்டு வருகிறது. அந்த வகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1991ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி முருகானந்தம், சம்பு கல்லோலிகர், சுப்ரியா சாகு, ரமேஷ் சந்த் மீனா உள்ளிட்ட 7 பேரை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.