Categories
மாநில செய்திகள்

வரதட்சணை கொடுமை…. கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல்…. கணவன் செய்த கொடூர காரியம்….!!!!

மதுரை அருகே கர்ப்பிணி மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சித்தூர் கிராமத்தை சேர்ந்த கணபதி ராஜா என்பவர் ஏழு மாதங்களுக்கு முன்பு நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நாகலட்சுமி மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் அண்ணன் காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் முதலில் நாகலட்சுமி அண்ணனிடம் விசாரணை செய்தபோது கணபதி ராஜா 10 சவரன் நகை வரதட்சணையாக கேட்டதாகவும், அதனை தங்களால் தர மறுத்த போதும் நாக லட்சுமியை மணந்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறினார். இதற்கிடையே கணவன் கணபதி ராஜாவிடம் விசாரணை நடத்தியபோது வரதட்சணை கிடைக்காத விரக்தியில் நாகலட்சுமி மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நகைக்கு ஆசைப்பட்டு ஐந்து மாதமாக இருந்த காதல் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |