நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பெரிய கடைவீதி ஜின்னா தெருவை சேர்ந்த சையத் இப்ராஹிம் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அப்துல் ரகுமான் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் திருச்சி அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். 4 பேரும் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அப்துல் ரகுமான் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.
இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்துல்ரகுமானை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.