திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடங்களும், திருமலையிலிருந்து திருப்பதிக்கு திரும்ப வர 40 நிமிடங்களும் ஆகும்.தேவஸ்தானம் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின் சாலை விபத்துகள் சிறிது குறைந்துள்ளன. எனினும் மலைப்பாதையில் பயணிகள் பயணிக்கும் போது ஹெல்மெட் அணியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிய வாகனங்களை கடக்கும்போது சுற்றுச்சுவரில் மோதி தங்களின் உயிரை இழந்து வருகின்றனர்.
இதை தடுக்க ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆயினும் அதை இருசக்கர வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்காததால் ஜனவரி 1-ந்தேதி முதல் திருமலை மலைப்பாதையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினர்.