பெட்டி கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது விளக்கூர் பகுதியில் பெட்டி கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சையத் அப்சல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 26 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.