Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு….. சிறப்பு ரயில்கள்…. IRCTC அறிமுகம்….!!!!

குஜராத் மாநிலம் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது. இது இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலம் ஆகும். இங்கு ஏராளமான ஆன்மிக தளங்கள் இருக்கிறது. இந்தநிலையில், உயிர்த்துடிப்புள்ள குஜராத் என்ற பெயரில் சிறப்பு ரயில் ஒன்றை ரயில்வேயின் ஐஆர்சிடிசி அமைப்பு ஆரம்பித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து குஜராத்துக்கும், கோவாவுக்கும் 2 சிறப்பு சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டன. குஜராத் சுற்றுலா ரயில் சோம்நாத், துவாரகா, அகமதாபாத், சபர்மதி ஆசிரமம், அக்சர்தாம் ஆலயம் உள்ளிட்ட பல ஆன்மீக தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும். இதேபோன்று கோவா சிறப்பு ரயில் கோவாவின் பல்வேறு தேவாலயங்கள், கடற்கரைகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும். மேலும் குஜராத்தில் உள்ள கோசாம்பா ரயில் நிலையத்தில் சுவரில் பல்வேறு ராமாயணக் காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளுதால் ரயில் நிலையமே ஆலயம் போல் காட்சி அளித்துள்ளது.

Categories

Tech |