Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 4 டோஸ் தடுப்பூசி போட்டும் வந்துருச்சு…. உச்சகட்ட அதிர்ச்சி செய்தி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து  மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனினும் கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி என்ற நிலையில், ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அவை என்னவென்றால், 4 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள 44 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். துபாயில் வசிக்கும் பெண் மத்திய பிரதேசத்துக்கு வந்துவிட்டு இன்று ஊர் திரும்ப இந்தூர் விமான நிலையம் வந்துள்ளார். துபாய் பெண்ணுக்கு ஆர்டிபிசியார் பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்ததால், விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |